நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!

#Recipe #Cooking #How_to_make
Mani
2 years ago
நெய் மைசூர் பாக் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

1 கப் கடலை மாவு

2 கப் நெய்

½ கப் சர்க்கரை

½ கப் தண்ணீர்

செய்முறை:

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு கப் அளவிற்கு கடலை மாவு சேர்த்து தீயை மிதமாக எரிய விட்டு நன்கு வறுத்து எடுங்கள். எரிய மாவு நன்கு வறுபட்டு மனம் வரத் தொடங்கும் அதுவரையிலும் நான்கு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்பு கடாயை கீழே இறக்கி வைத்து கடலைமாவை குளிர வைத்துக் கொள்ளவும், பின்பு வறுத்த கடலை மாவை ஒரு பெரிய பவுளில் சலித்து சேர்த்துக் கொண்டு. பெரிய பின் இருக்கும் கட்டிகளையும் உடைத்து விட்டு திரும்ப சலித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு கப் அளவிற்கு நெய் சேர்த்து நெய் உருகும் வரை மட்டும் அடுப்பில் வைத்து உடனே இறக்கி மட்டும் பின்பு நாம் சலித்து வைத்திருக்கும் கடலை மாவுடன் சிறிது சிறிதாக நெய் ஊற்றி பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் அரை கப் அளவிற்கு சர்க்கரை அரை கப் அளவு தண்ணீரும் சேர்த்து கிளறி விடுங்கள். சர்க்கரை பாகு நுரை கிளறி கொதித்து வரும் பொழுது பிசுபிசு என்ற பதத்திற்கு வந்தவுடன் நாம் கரைத்து வைத்திருக்கும் கடலை மாவையும் கடாயில் சேர்த்துக் கொண்டே கிளறி விடுங்கள்.

பின் கடலை மாவு வேக ஆரம்பித்தவுடன் சிறிது நெய் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் கடலை மாவு வேகும் போது நெய் உறியும் அதனால் வேகும் நெய் சேர்த்தூ கிளறி விடுங்கள். இந்த நெய்யும் கரைந்தவுடன் பின்பு கடைசியாக மீதம் இருக்கும் நெய்யையும் ஊற்றி நன்றாக கிளறி விடுங்கள்.

மைசூர் பாக் கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு கடாயை கீழே இறக்கி கொள்ளவும். பின் ஒரு பெரிய தட்டு எடுத்துக் கொண்டு அதில் பெரிய தடவி கடாயில் இருக்கும் மைசூர்பாக்கை தட்டில் ஊற்றி நன்றாக குளிர வைத்துக் கொள்ளுங்கள்.

பின் மைசூர்பாக் நன்கு குளிர்ந்து கட்டியாக மாறியவுடன் உங்களுக்கு வேண்டுமென்ற வடிவத்தில் மைசூர் பாக்கை வெட்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான நெய் மைசூர் பாக் இனிதே சுவையான நெய் மைசூர் பாக் இனிதே தயாராகிவிட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4