திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 மாதிரியை வைத்து வழிபாடு
#India
#Temple
#Thirumal
#Tamilnews
#Scientists
#Breakingnews
#ImportantNews
#Scientist
Mani
1 year ago
சந்திரயான்-3 ராக்கெட் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சந்திரயான்-3 மாதிரி மற்றும் ஆவணங்களை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வழிபாடு நடத்தினர்.
கோவிலில் இருந்து வெளியே வந்ததும் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படும் என அறிவித்தனர். சந்திரயான்-3 ரோவர், வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவில் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வக இயக்குனர் அமித்குமார் பத்ரா, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், இணை திட்ட இயக்குனர் கல்பனா மற்றும் பலர் இடம் பெற்றிருந்தனர்.