டுவிட்டர் பயனாளர்களுக்கு கிடைக்கவுள்ள வருமானம்!
டுவிட்டர் பயனாளர்களும் இனி விளம்பர வருவாய் தமக்கு யுடியுப் போன்று பெற்றுக்கொள்ளும் வசதி வந்துள்ளது.
மிகப்பெரிய தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில் ப்ளூ டிக் பெற கட்டணம், தனி நபர்களை சப்ஸ்கிரைப் செய்து, சிறப்பு தகவல்களை பெறுதல் போன்ற வசதிகள் அடக்கம்.
ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பல விமரிசனங்களைப் பெற்ற போதிலும், பலரும் பணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர். ஆனால், அப்போதே, ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் டுவிட்டர் விளம்பரம் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியை பகிர்ந்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க்.
தற்போது தான் சொன்னதை செய்தும் காட்டியுள்ளார். அதன்படி, ப்ளூ டிக் பெற்ற பயனாளர்களுக்கு, விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டுவிட்டர் கிரியேட்டர்களுக்கு இது தொடர்பான மின்னஞ்சலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாம்.
சிலர், தங்களுக்கு டுவிட்டரிலிருந்து வந்திருக்கும் வருவாய் தொடர்பான தகவல்களையும் டிவிட்டரில் பகிர்ந்து வருகிறார்கள். ஐரோப்பா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் இது பரவலாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக, மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.
டுவிட்டர் செயல்படும் முறையைப் போலவே புதிதாக வந்த திரட்ஸ் இருந்ததால் சட்டப்படி வழக்கு தொடர எலான் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பயனாளர்களுக்கு, விளம்பரம் மூலம் இருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை பயனாளர்களுக்குவழங்கவிருக்கும் திட்டம் வந்திருக்கிறது.