சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது

#India #Moon #2023 #Tamilnews #Breakingnews #Rocket #Space
Mani
1 year ago
சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திரயான் -3 விண்கலத்தை ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் -3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ செய்து முடித்திருந்த நிலையில், இதற்கான 25.30 மணி நேர கவுண்டவுன் நேற்று பகல் ஒரு மணிக்குத் தொடங்கியது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலத் திட்டம் தோல்வியடைந்த நிலையில் அதில் பெறப்பட்ட பாடங்களைக் கொண்டு சுமார் 615 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர். 3,900 எடை கொண்ட சந்திரயான் -3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் உள்ளன.

விண்கலத்தை ஏந்திச்செல்லும் ராக்கெட்டில் திட, திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் பகுதி நிலவில் தரையிறங்கும் நிலையில், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ரோவர் கருவி 100 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் – 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 4-வது விண்கலமான ‘சந்திரயான் -3’, விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருந்ததோடு, விஞ்ஞானிகள் இந்த முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்-3, எம் 4 ராக்கெட் இன்று பிற்பகல், 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான, கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஊர்திகலம், உந்துகலம், தரையிறங்கி கலம் என மூன்று கலங்கள் தாங்கி செல்லும் சந்திரயான் 3 விண்கலம், முதல் 3 நிலைகளை வெற்றிகரமாக கடந்தது. தொடர்ந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் 179 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். விண்கலகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூரு உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள். பூமியில் இருந்து 179 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் விண்கலம் நிறுத்தப்படும். சந்திரயான் -3 புறப்பட்டு சுமார் 16 நிமிடங்களில் 2:51 மணிக்கு புவியின் வட்டப்பாதையை அடையும். சந்திரயான் விண்கலம் 16 நிமிடம் 9 வினாடிகளில் புவியின் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. விண்ணில் பாந்த சந்திராயன் 3 விண்கலத்தை அங்கிருந்த அனைவரும் கை தட்டி உற்சாகமாக கண்டுகளித்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதேபோல் உலகமே உற்று நோக்கிய வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வாக ‘சந்திரயான் – 3’ விண்ணில் சீறிப்பாயும் காட்சியை நேரில் காண, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் குவிந்தனர். அந்த வகையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது அவர்கள் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பார்வையாளர் அரங்கில் அனுமதிக்கப்பட்டு ‘சந்திரயான் – 3’ விண்ணில் பாய்ந்த காட்சிகளை கைதட்டி உற்சாகமாக கண்டு கழித்ததனர். ரஷ்யா, சீனா, அமெரிக்க ஆகிய நாடுகள் நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ள நிலையில், இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.