வரவு அதிகரிக்கும் , பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மேஷ ராசியினர் -இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வரவு அதிகரிக்கும் , பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மேஷ ராசியினர் -இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : இன்று உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பரணி : நட்புகளால் அனுகூலம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் முயற்சி பலிதமாகும். கார்த்திகை 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர். திடீர் வரவால் நெருக்கடிகள் நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : அடுத்தவர் தரும் சங்கடம் தடுமாற்றத்தை உண்டாகும் என்றாலும் சமாளித்து வெற்றி அடைவீர்கள். ரோகிணி : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். குடும்பத்தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மிருகசீரிடம் 1,2 : எதிர்பாராத தடைகளால் உங்கள் செயல் இழுபறியாகும். மதியத்திற்கு மேல் நிலைமை சீராகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். திருவாதிரை : பண வரவில் இருந்த தடை நீங்கும். மதியத்திற்கு மேல் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும் நாள் புனர்பூசம் 1,2,3 : நீண்ட நாள் பிரச்னை ஒன்றுக்கு இன்று தீர்வு காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்

கடகம்

புனர்பூசம் 4 : காலையில் உங்கள் முயற்சிகளில் ஆதாயம் காண்பீர். உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். பூசம் : உங்கள் செயல்களால் வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் ஒரு முயற்சி நிறைவேறும். ஆயில்யம் : தொழிலில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்:

மகம் : உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். பூரம் : இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்திரம் 1 : உங்கள் முயற்சியில் ஆதாயம் ஏற்படும். பிரபலங்களை சந்தித்து அவர்கள் மூலம் வேலைகளை முடிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4 : திட்டமிட்ட வேலை நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள். அஸ்தம் : நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடைகள் உண்டானாலும் இறுதியில் உங்கள் முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2 : உங்கள் செயல்களில் உண்டான தடை இன்று விலகும். முன்னோர்களின் ஆசியுண்டு.

துலாம்

சித்திரை 3,4 : நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். புதிய பாதை தெரியும். சங்கடங்கள் விலகி நன்மை அடைவீர்கள். சுவாதி : உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும். தடைகளை விலக்கி ஆதாயம் காண்பீர்கள். லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : எதிர்பாராத பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். வருமானத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் முயற்சி மதியத்திற்கு மேல் வெற்றி பெறும். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். அனுஷம் : குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நண்பர்கள் ஆதரவுடன் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர் கேட்டை : முயற்சிக்கேற்ற லாபத்தை அடைவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

தனுசு

மூலம் : எதிர்ப்பு விலகும். நினைத்ததை துணிச்சலுடன் செய்து முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம் : உடலில் இருந்த சங்கடம் நீங்கும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உத்திராடம் 1 : உற்சாகம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து அடையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளால் சில சங்கடங்களை அடைவீர்கள். திருவோணம் : சொத்துகளில் இருந்த பிரச்னை மீண்டும் தலை எடுக்கும். உறவினரால் சங்கடம் தோன்றும். அவிட்டம் 1,2 : நினைத்ததை சாதிக்க முடியாமல் இன்று சோர்வு அடைவீர்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்:

அவிட்டம் 3,4 : தாய்வழி உறவுகள் ஆதரவால் எண்ணம் நிறைவேறும். வருமானத்தில் உண்டான தடை விலகும். சதயம் : கடுமையான முயற்சிக்குப்பின் உங்கள் செயல் லாபமாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூரட்டாதி 1,2,3 : தொழில் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர். பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்

பூரட்டாதி 4 : நீண்டநாள் பிரச்னை ஒன்றில் துணிச்சலாக முடிவு காண்பீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். ரேவதி : இன்று மதியம் வரை உங்கள் முயற்சி இழுபறியாக இருக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.