தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

#India #Tamil Nadu #heat #Tamilnews #Breakingnews #Chennai
Mani
1 year ago
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:

தமிழகத்தில் இரவு நேரங்களில் மழை பெய்தாலும், பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்குகின்றனர். மக்கள் இளநீர், தர்பூசணிகள் மற்றும் குளிர்பானங்கள் விற்கும் நிறுவனங்களுக்குச் செல்வதன் மூலம் வெப்பத்திலிருந்து நாடிச்செல்வதை காண முடிகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் வெப்பநிலை 2-4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!