சபரிமலை நடை நாளை திறக்கப்படும்ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். தமிழ் ஆடி மாத பூஜை மற்றும் மலையாள கருக்கிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
அன்றைய தினம் வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். நாளை துவங்கி ஜூலை 21ம் தேதி வரை ஐந்து நாட்களும் கோவிலில் வழக்கமான பூஜைகளோடு, தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடக்கும் என அறிவித்துள்ளனர்.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளமான sabarimalaonline.org மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, திருவனந்தபுரம், கோட்டயம், செங்கனூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.