வாழ்க்கைத் துணையின் விருப்பப்படி செயல்படும் தனுசு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வாழ்க்கைத் துணையின் விருப்பப்படி செயல்படும் தனுசு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: துணிச்சலுடன் செயல்பட்டு நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவீர்கள். வரவின் வழியே மகிழ்ச்சி அடைவீர்கள். கார்த்திகை 1: வீட்டிற்குள் சில மாற்றங்களை செய்வீர்கள். நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். பொருளாதார நெருக்கடி நீங்கும். ரோகிணி: உங்கள் தன்மானத்தை சீண்டும் வகையில் இன்று சிலர் செயல்படலாம். அமைதி காப்பது நன்மையாகும். மிருகசீரிடம் 1,2: வார்த்தைகளில் கவனம் தேவை. யாருக்கும் எந்த வாக்குறுதியும் இன்று வழங்க வேண்டாம்.

 மிதுனம்

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினருக்காக இன்றைய நாளை செலவு செய்வீர்கள். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்கள். திருவாதிரை: செயலை நிறைவேற்றுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புனர்பூசம் 1,2,3: நீங்கள் விரும்பியதை அடையும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மனக்குழப்பம் விலகும். 

கடகம்

புனர்பூசம் 4: செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம். பூசம்: உங்கள் எண்ணத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். யோசித்து செயல்படவும். ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதில் நிம்மதி உண்டாகும். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.

சிம்மம்

மகம்: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வசூலாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூரம்: புதிய நட்புகளால் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்திரம் 1: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். உங்கள் வாக்கிற்கு மரியாதை உண்டாகும். 

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரம் செய்யும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். சித்திரை 1,2: பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். 

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பெரியோர் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். சுவாதி: தந்தை வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை தீரும். விசாகம் 1,2,3: அறிமுகம் இல்லாதவர்களிடம் உங்கள் பிரச்னைகளை பற்றி பேச வேண்டாம் 

விருச்சிகம்

விசாகம் 4: நேற்று இருந்த சங்கடம் நீங்கும். குடும்பத்தினருடன் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அனுஷம்: நட்புகளிடம் மோதல் உண்டாகும். பிறரது விஷயத்தில் தலையிடுவதால் பிரச்னைகளை சந்திக்க நேரும். கேட்டை: செயலில் குழப்பம் உண்டாகும். நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். நிதானமாக செயல்படுங்கள்.

தனுசு

மூலம்: நண்பர்கள் வழியே நன்மைகளைக் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பூராடம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையின் விருப்பப்படி செயல்படுவீர்கள். உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்ததை அடைவீர்கள். நீண்ட நாட்களுக்குப் பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: சங்கடம் விலகி உற்சாகமுடன் செயல்படுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். திருவோணம்: எதிரிகள் உங்களிடம் வந்து சரண் அடைவார்கள். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். அவிட்டம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். பிள்ளைகள் வழியே செலவு கூடும். சதயம்: குடும்பத்தில் சில சலசலப்புகள் வந்து போகும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்தவற்றில் நன்மையை காண முடியாது. தேவையற்ற பேச்சுக்கு ஆளாக வேண்டி வரும். 

மீனம்:

பூரட்டாதி 4: உங்கள் மனம் ஓய்வினை எதிர்பார்க்கும். வழக்கமான வேலைகளையும் ஒத்தி வைப்பீர்கள். உத்திரட்டாதி: நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். மனதில் இருந்த குழப்பமும் பதட்டமும் நீங்கும். ரேவதி: செயல்களில் நெருக்கடி உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!