திருமணம் குறித்து நற்செய்தி வரும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
திருமணம் குறித்து நற்செய்தி வரும் துலா ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்:

அசுவினி: உங்கள் செயல்களில் நெருக்கடி தோன்றும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். பரணி: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவுகள் உதவி புரிவார்கள். கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பண வரவு திருப்தி தரும். ரோகிணி: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சகோதரர்களின் உதவி கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் கவனம் தேவை. நிதானித்து செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும். திருவாதிரை: பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புனர்பூசம் 1,2,3: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.

கடகம்

புனர்பூசம் 4: வேலை பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். பூசம்: மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். ஆயில்யம்: செயலில் இருந்த தடைகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: புதிய திட்டங்களோ முயற்சியோ இன்று வேண்டாம். திடீரென்று தோன்றும் செலவுகளால் சங்கடப்படுவீர்கள். பூரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மையைக் காண முடியாமல் போகும். உங்கள் கவனம் இன்று தடுமாறும். உத்திரம் 1: புதிய முயற்சிகளில் ஈடுபடுவதும் முதலீடு செய்வதும் இன்று வேண்டாம். அமைதி காப்பது நலம்.

கன்னி

உத்திரம் 2,3,4: உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி லாபமாகும். அஸ்தம்: விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். சித்திரை 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். சுவாதி: பழைய செயல் ஒன்றிலிருந்து பணம் வந்து சேரும். உறவினர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் நிலை உண்டாகும். விசாகம் 1,2,3: விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: முன்னோர்கள் அருளினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும். கேட்டை: திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: வெளியூர் பயணத்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும். நேற்று இழுபறியில் முடிந்த முயற்சி நிறைவேறும். பூராடம்: எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும். உத்திராடம் 1: கடன் தொல்லையால் மனம் சங்கடப்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபமான நாள். திருவோணம்: வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். மகிழ்ச்சி கூடும். அவிட்டம் 1,2: வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும்

கும்பம்

அவிட்டம் 3,4: எதிரிகளால் உண்டான தொல்லைகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். சதயம்: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அந்நியர் ஒருவரின் உதவி கிடைக்கும். பூரட்டாதி 1,2,3: மறைமுகமாக தொல்லை கொடுத்தோரை கண்டுபிடிப்பீர்கள். உங்களது முயற்சி வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர்கள். ரேவதி: சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். உறவினர்களின் பாராட்டு கிடைக்கும்.