மேஷ ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
மேஷ ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மேஷ ராசி அதிர்ஷ்ட கல்: 

மேஷ ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் பவளம். பவளம் மோதிரத்தினை அணிவதால் அவர்களுக்கு தெய்வ கடாட்சம் கிடைக்கும். அடுத்தவர்களிடம் இருக்கும் வீண் கோபங்கள் மறைந்து அன்பு பெருகும். 

மேலும் வீட்டில் சந்தோசம் பெருகும், அதிர்ஷ்டம் உண்டாகும். பவள மோதிரத்தினை அணிவதால் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அழித்துவிடும். அதோடு தெய்வ சிந்தனை, நல்லறிவு, துணிச்சலை கொடுக்கும். 

புதிதாக தொழில் செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தும். மேலும் செய்கின்ற தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும். குறிப்பாக செவ்வாய் திசை உள்ளவர்கள் இந்த பவள மோதிரம் அணியலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4