எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாகும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாகும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர்கள். பெரியோரின் ஆதரவு உண்டு. பரணி: தள்ளிப்போன முயற்சிகள் இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் கூடும். நினைத்ததை சாதிப்பீர்கள். கார்த்திகை 1: உங்கள் செயல்களை விமர்சனம் செய்தவர்கள் மாற்றம் அடைவர். எதிர்பார்த்த வருமானம் உண்டு.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயல்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும். ரோகிணி: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். திருவாதிரை: வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் லாபம் காண்பீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: அரசு வழியில் நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபமாகும். குழந்தைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூசம்: உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினரால் உங்கள் செயல் வெற்றியாகும். ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

சிம்மம்

மகம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும். பூரம்: மனதில் குழப்பம் வந்து நீங்கும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். உத்திரம் 1: காலையில் செயல்களில் தடுமாற்றத்தை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். 

கன்னி:

உத்திரம் 2,3,4: வருமானத்தில் இருந்த தடை விலகும். மதியத்திற்கு மேல் திடீர் செலவு தோன்றும். அஸ்தம்: உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சித்திரை 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். 

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய பாதை தெரியும். நட்பு வட்டம் விரியும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பயணத்தின் வழியே ஒரு முயற்சி நிறைவேறும். விசாகம் 1,2,3: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பொருளாதார நெருக்கடி விலகும். 

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு வழி காட்டுவார்கள். அனுஷம்: போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வாழ்வில் உயர்வீர்கள். 

தனுசு

மூலம்: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பூராடம்: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள் என்றாலும் அதை சமாளிப்பீர்கள். 

மகரம்: 

உத்திராடம் 2,3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். திருவோணம்: வியாபாரத்தில் இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். பண வரவில் தடை ஏற்படும். அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நண்பர்களால் சில சங்கடங்கள் உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: தொழில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வருவாய் அதிகரிக்கும். சதயம்: உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர், வாழ்வில் திருப்புமுனை உண்டாகும். பூரட்டாதி 1,2,3: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: நெருக்கடியில் இருந்து வெளியில் வருவீர்கள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி: புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ரேவதி: பகைவரால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உறவினர்கள் ஒத்துழைப்பால் உங்கள் செயல் பூர்த்தியாகும்.