நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படும் மகர ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படும் மகர ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: அரசு வழியில் உண்டான சிக்கல் விலகும். தடைபட்டிருந்த முயற்சிகள் நிறைவேறும். பரணி: காலையிலேயே நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் செயல்கள் நீங்கள் நினைத்தபடி நடந்தேறும். கார்த்திகை 1: உங்கள் செயல்களுக்கு உறவினர்கள் உதவி செய்வர். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். 

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். அரசு வழி செயல்கள் ஆதாயமாகும். ரோகிணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: தாய்வழி உறவினர்கள் ஆதரவுடன் செயலில் வெற்றி காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். 

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4: தடைபட்டிருந்த முயற்சி இன்று நடந்தேறும். மதியத்திற்கு மேல் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். திருவாதிரை: புதிய முயற்சிகள் ஆதாயம் தரும். அரசியல் வாதிகளின் எண்ணம் நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விஐபிகளின் ஆதரவால் விரும்பியதை அடைவீர்கள். பூசம்: தடைபட்ட வருவாய் வந்து சேரும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆயில்யம்: பேச்சாற்றலால் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். 

சிம்மம்

மகம்: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் ஏற்படும். உங்களின் நிதிநிலை உயரும். பூரம்: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கூடும். மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். உத்திரம் 1: மனம் காட்டும் வழியில் இன்று செயல்படுவீர்கள். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும். 

கன்னி

உத்திரம் 2,3,4: திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அஸ்தம்: அலைச்சல் அதிகரித்து சோர்வடைவீர்கள் என்றாலும், உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சித்திரை 1,2: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பில் இருந்து நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். 

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். நட்பு வட்டம் விரியும். சுவாதி: லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் 

விருச்சிகம்

விசாகம் 4: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். அனுஷம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். தடைகள் விலகும். கேட்டை: நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். 

தனுசு: 

மூலம்: கடந்தகால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு. பூராடம்: தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பயணத்தால் ஆதாயம் காண்பீர்கள். உத்திராடம் 1: மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். 

மகரம்:

உத்திராடம் 2,3,4: நேற்று உண்டான சங்கடம் இன்று இல்லாமல் போகும். குழந்தை நலனில் அக்கறை கொள்வீர்கள். திருவோணம்: புதிய முயற்சி, வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும். கவனமுடன் செயல்படவும். அவிட்டம் 1,2: வீண் சச்சரவுகள் உங்களைத் தேடி வரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுங்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகள் வெற்றியாகும். கடன்களை அடைப்பீர்கள். சதயம்: தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னைகள் விலகும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடைகள் இன்று விலகும். நட்பு வட்டம் விரிவடையும். 

மீனம்

பூரட்டாதி 4: எதிரிகளால் உண்டான சங்கடங்கள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். மாலையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். ரேவதி: அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செயல்களுக்கு பாராட்டு அதிகரிக்கும்.