இமாச்சலப் பிரதேசத்தில் மழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு!

#India #people #Road #Flood #Tamilnews
Mani
1 year ago
இமாச்சலப் பிரதேசத்தில் மழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு!

இமாச்சல பிரதேசத்தில் சேதமடைந்த சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலங்களை புனரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்குவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங் அறிவித்துள்ளார்.

இந்த நிதி, சேது பாரதம் யோஜனாவின் கீழ் வழங்கப்படுவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சிங் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த சந்திப்பின் போது, ​​தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து நிரந்தர தீர்வை முன்வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்காரி உத்தரவிட்டதாக சிங் குறிப்பிட்டார்.

சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பாலங்களை சீரமைக்கவும், மாநில பொதுப்பணித்துறை சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு கட்காரி உத்தரவிட்டுள்ளதாக சிங் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!