கங்குவா படத்தில் தொடர்ந்து அதிரடி அப்டேட் படக்குழு அறிவிப்பு

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
கங்குவா படத்தில் தொடர்ந்து அதிரடி அப்டேட் படக்குழு அறிவிப்பு

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் "கங்குவா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சூர்யாவின் பிறந்தநாளான 23ஆம் தேதி கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகவுள்ளது. இந்நிலையில் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. குதிரையின் மீது நீண்ட முடியுடன் சூர்யா அமர்ந்து செல்வது போன்று வித்தியாசமான லுக்கிலுள்ள உருவாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4