முட்டை போண்டா இப்படி செய்யுங்க

#Healthy #Recipe #Cooking #Tamilnews
Mani
2 years ago
முட்டை போண்டா இப்படி செய்யுங்க

தேவையான பொருட்கள்:

7 முட்டை வேகவைத்து

3 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு

3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

1 டீஸ்பூன் கறிமசாலா தூள்

1 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

உப்பு தேவையான அளவு

எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

செய்முறை:

முதலில் முட்டையை கழுவி வேகவைத்து தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பௌலில் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, கறிமசாலா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி கொள்ளவும்.

மஞ்சள் கருவை தனியாக எடுத்து வெள்ளை கருவை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து பகோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4