மிதுன ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits #Lanka4
Prasu
2 years ago
மிதுன ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் உங்கள் ராசிக்கு எந்த ராசி கற்கள் கொண்ட மோதிரத்தினை அணிய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். 

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மிதுனம் ராசி கல்: 

மிதுன ராசியினர் அணிய வேண்டியது மரகத மோதிரம் ஆகும். மரகதம் பதித்த மோதிரத்தினை மிதுன ராசிக்காரர்கள் அணிந்தால் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டமும் அளிக்கும். 

பேச்சாற்றலில் கவனமும், சாமர்த்தியமும் அதிகரிக்க செய்யும். மரகத மோதிரம் கைகளில் அணிவதால் நல்ல கல்வி செல்வத்தை கொடுக்கும். மேலும் புத்திக்கூர்மை, பேச்சாற்றல், நினைவாற்றல் பெருகும். 

அதிர்ஷ்டங்களையும் நல்ல எண்ணங்களையும் உருவாக்கும். கற்பனை திறனை கொடுக்கும். மலட்டு தன்மையினை நீக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து வைக்கும். குறிப்பாக புதன் திசை நடப்பவர்கள் இந்த மோதிரத்தினை அணியலாம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4