குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் திறமையால் சமாளிக்கும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் திறமையால் சமாளிக்கும் தனுசு ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். பரணி: நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும். உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: செயலில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் முடிவில் வெற்றி காண்பீர்கள். ரோகிணி: தாய்வழி உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மகிழ்ச்சி கூடும். மிருகசீரிடம் 1,2: இன்றைய முயற்சிகள் தள்ளிப் போகும். சொத்து விவகாரத்தில் இழுபறி உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: காலையிலேயே நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். புதிய முயற்சிகள் லாபமாகும். திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி எளிதாக நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படும். பூசம்: செயலில் வேகம் இருக்கும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம்: குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த மாற்றத்தை செய்வீர்கள்.

சிம்மம்

மகம்: மனதில் தேவையற்ற சிந்தனை வந்து போகும். உங்கள் செயல்களில் இழுபறியான நிலை இருக்கும். பூரம்: திருப்பு முனையான நாள். நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உத்திரம் 1: பெரியவர்கள் வழிகாட்டுதல் லாபம் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள் என்றாலும், எதிர்பாராத செலவு ஏற்படும். சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும்.

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுவாதி: எதிர்பார்த்த வரவு உண்டு. வெளி வட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். மதியத்திற்கு மேல் புதிய முயற்சிகள் வேண்டாம்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்கள். அனுஷம்: எதிர்பார்த்த பணம் உங்களைத் தேடி வரும். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். கேட்டை: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

தனுசு

மூலம்: எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பூராடம்: சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உத்திராடம் 1: குடும்பத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். புதிய முயற்சி பலன் தரும். திருவோணம்: தடைபட்டிருந்த செயல்கள் இன்று நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். அவிட்டம் 1,2: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நினைத்தது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. சதயம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். வழிபாடு மன நிம்மதியை உண்டாக்கும் பூரட்டாதி 1,2,3: நினைத்ததை அடைவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு நீங்கும்.

மீனம்: 

பூரட்டாதி 4: சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். உத்திரட்டாதி: உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ரேவதி: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.