டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து அபாய அளவை தாண்டியது

#India #Delhi #Breakingnews #River
Mani
1 year ago
டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து அபாய அளவை தாண்டியது

டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும் ஒருமுறை மழை பெய்தது. இதனால் யமுனை ஆற்றில் முன்பு குறைந்திருந்த நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தது. இதனால், யமுனை ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் அபாய அளவை தாண்டியுள்ளது.

அதன்படி, நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.34 மீட்டராக இருந்தது, பின்னர் இரவு 11 மணியளவில் 205.45 மீட்டராக அதிகரித்தது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் ஜூலை 22 (இன்று) வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!