திருமணமானவர்கள் கவனத்துக்கு.... குறிப்பு பார்த்து நீங்கள் விரும்பிய ராசியில் குழந்தை பெற இதோ அறிவுரை.

#Astrology #Horoscope #Lanka4 #திருமணம் #ஜோதிடம்
திருமணமானவர்கள் கவனத்துக்கு....  குறிப்பு பார்த்து நீங்கள் விரும்பிய ராசியில் குழந்தை பெற இதோ அறிவுரை.

இதுவரை எல்லோரும் குழந்தை பிறந்த பின்பே ஜாதகம் அல்லது குறிப்பு பார்ப்பார்கள். 

இதில் நான் குறிப்பிடுவது குறிப்பை பார்த்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளுங்கள்!

 பிறக்காத குழந்தைக்கு எப்படி குறிப்பு இருக்க முடியும் என்று உங்கள் மனதில் எழும் கேள்வி நியாயமானது தான், தொடர்ந்து படியுங்கள் தெளிவு வரும்!

 இன்று காலம் மாறிவிட்டது. திருமணமாகி 10 மாதத்தில் குழந்தை கிடைக்கும் அல்லது பெற்றுக் கொள்வது என்கின்ற நிலைமை இப்பொழுது இல்லை. எல்லோரும் திட்டமிட்டே குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள்

ஆனால் அவர்கள் எத்தனை ஆண்டுகள் என்று திட்டமிடுகின்றார்களே தவிர எப்பொழுது பெற்றுக்கொள்ள வேண்டும் எந்தக் கிரக அமைப்பில் பிறந்தால் எப்படி இருப்பார்கள் என்பது பற்றி சிந்திப்பதில்லை,

 அவர்கள் சிந்திக்காத ஒன்று. இங்கே சில உதாரணங்களை உங்களுக்கு முன் வைக்கின்றேன்.

 ஒரு ஜாதகத்தில் சூரியன் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர் நிச்சயமாக பிரபல்யமானவராகவும் அரசியலோடும் அரசாங்கத்துடனான தொடர்பும் அதனால் நன்மையும் இருக்கும் .

இதேபோன்று புதன் நன்றாக இருக்கின்ற பட்சத்தில் கல்விமானாகவும் வியாபாரத் தந்திரம் உள்ளவராகவும், கணிதத்துறையில் பாண்டித்தியம் பெற்றவராகவும் நிச்சயமாக இருக்கக்கூடிய அமைப்பு உண்டு, 

சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்ற ஜாதகர்கள் சொத்துக்கள் வாகனம், நில,புலம் எதிர்பாலார்,கவர்ச்சி சுகபோக வாழ்க்கை என்று வாழக்கூடிய அமைப்பு. இப்படி சனி உச்சமானாலும் ஆட்சி ஆனாலும் நல்ல பலன்களை தருவார். 

இதே கிரகங்கள் வலிமை இழக்கும் காலங்களில் பிறக்கும் குழந்தைகள் இந்தத் துறைகளில் வெற்றியை அடையவோ சுகங்களை அனுபவிக்கவோ முடியாது.

 கிரகங்கள் ஆட்சி உச்சம் அடைந்தால் மட்டும் போதாது. அதற்குரிய தெசா புத்திகள் வரும்பொழுதுதான் அதன் முழுப்பலனையும் அனுபவிக்கமுடியும். 

 இதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்வது என்பதற்கான ஒரு சிறு உதாரணம் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமாகவும் ஆவணி மாதத்தில் ஆட்சியாகவும் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பார். 

ஒருவேளை மாதக் கிரகங்களை கணிப்பது சுலபமாக இருந்தாலும் அந்தக் காலங்களில் குழந்தை கிடைப்பது என்பது சற்று சவாலான விடயமாகவே இருக்கும். 

ஆனாலும் குரு சனி ராகு கேது போன்ற ஆண்டு கிரகங்களை அனுசரித்து வெற்றிகளை பெறலாம். தமிழுக்கு தை மாசி மாதங்களில் சூரியன் சனியின் வீட்டில் இருப்பார்.

 அது நல்லது அல்ல. இது எல்லாம் ஒரு முயற்சி தானே. இதில் இழப்பொன்றும் வரப்போவதில்லை. இதற்கு சாதகமாக லக்கினம் மற்றும் ராசியும் அமைய வேண்டும். 

எனது ஆராய்ச்சியில் உறுதியாக நான் சொல்லக்கூடிய விடயங்கள் நிறையவே உண்டு, அவற்றில் ஒன்று சினிமாவில் அல்லது கலைத்துறையில் பிரபல்யங்களாக இருந்து உழைப்பவர்கள் ஜாதகங்களில் புதன் சுக்கிரன் செயற்கை அல்லது பரிவர்த்தனை. அதையும் தாண்டி நட்சத்திர பரிவர்த்தனை பதினோராம் வீட்டிற்கு தொடர்பு இருக்கும், 

 எல்லாமே விதி என்று சொல்கின்ற சோதிடர்கள் மத்தியில் நீங்கள் இப்படி சொல்லலாமா என்று கேட்கலாம். இதிலும் ஒரு பகுத்தறிவு இருக்கின்றது அதாவது விதியை மதியால் வெல்லலாம்!

0 விதி என்கின்ற சோதிடத்தை மதி என்ற சந்திரனால்(மதி என்றால் புத்தி அல்லது அறிவு) அல்லது சந்திரனை வைத்து வெல்லலாம் என்பது இதன் பொருள். 

 அறிவை வைத்து இதை ஓர் அளவு கணித்துக் கொள்ள முடியும், இன்று பலர் அறுவை சிகிச்சைக்கு நாள் பார்க்கின்றார்கள் அதேபோல்தான் இதுவும். இதற்கு ஓர் உதாரணத்தை ராமாயணத்திலேயே என்னால் கூற முடியும்.

 ராவணனுக்கு பிள்ளை பிறக்கின்ற பொழுது சனியின் பார்வை இருக்கின்றபடியால் பிள்ளைக்கு ஆயுள் குறைவு என்று முதலே அறிவுறுத்தப்பட்டது. 

அதனாலேயே ராவணன் சனீஸ்வரனை பிடித்து குழந்தை பிறக்கின்ற நேரத்தில் கட்டி வைத்தான் என்றும் அப்படி இருந்தும் சனீஸ்வரன் குழந்தை பிறக்கின்ற வேளை தனது காலை நீட்டி தனது ஆதிக்கத்தை செலுத்தியபடியால் கோபம் கொண்ட ராவணன் சனீஸ்வரனின் காலை அடித்து முறித்தான் என்பதும் அதனால் தான் முடச்சனி என பெயர் வந்தது என்றும் ஒரு கதை கூறுவார்கள்.

 ராவணனே தோற்றுவிட்டான் என்பதற்காக நாம் ஏன் முயற்சிக்கக் கூடாது? அல்லது ஜெயிக்க கூடாது! சிந்தியுங்கள் ராவணன் விட்ட தவறை சரி செய்வோம்.

 இந்தக் கட்டுரையை பொறுமையாக வாசித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

 பரமேஸ்வரன் சுதாகர் 

 சித்தர் சோதிட நிலையம் 

சூரிச் சுவிஸ் 

 Cittar Astro 

 Zwinglistrasse 37

 8004 Zürich

 Switzerland 

 Tel +41 79 261 33 31

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!