கடக ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
கடக ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

கடக ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் முத்து. 

முத்து பதித்த மோதிரத்தினை அணிவதால் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் அளிக்கும். மனதில் உள்ள வீண் சந்தேகங்களை நீக்கிவிடும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் பெருகும்.

ஆண்களுக்கு தன்னம்பிக்கையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும். தம்பதி இருவருக்கும் இடையில் ஒற்றுமையினை கொடுக்கும். முத்து பதித்த மோதிரம் அணிவதால் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள். உறவு முறைகளை வலுப்படுத்தும். 

நட்பினை பாதுகாக்கும். குறிப்பாக புதன் திசை நடப்பவர்கள் இந்த முத்து பதித்த மோதிரத்தினை தாராளமாக அணியலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4