குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் மேஷ ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடும் மேஷ ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீண்டநாள் முயற்சி வெற்றி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். கார்த்திகை 1: குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பால் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பெரியோரின் ஆதரவு அதிகரிக்கும். குழந்தைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி: பழைய செயல் ஒன்றில் இன்று ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். மிருகசீரிடம் 1,2: மற்றவர் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை: விருப்பப்படி செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றுவீர்கள். தாய்வழி உறவினரின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கூடும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் முயற்சி லாபமாகும். சகோதரர்கள் ஆதரவால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பூசம்: சிந்தித்து செயல்பட்டு செயலில் வெற்றி காண்பீர்கள். பயணத்தினால் ஆதாயம் ஏற்படும். ஆயில்யம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். எதிர்பார்த்த வருவாய் உண்டு. பூரம்: தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். உத்திரம் 1: ஆரோக்கியம் சீராகும். செயலில் வேகம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர்கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: இன்று பண நெருக்கடியால் சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். அமைதி காக்க வேண்டியநாள். சுவாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: இழுபறியாக இருந்த செயல்கள் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம்: பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சொத்து சிக்கல்கள் தீரும். கேட்டை: விரும்பியதை இன்று அடைவீர்கள். எதிர்பாராத வருவாயால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தொழில் தொடங்க நினைத்தவர்களின் எண்ணம் நிறைவேறும். உத்திராடம் 1: குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். நட்பு வட்டம் விரியும். திருவோணம்: திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்

கும்பம்

அவிட்டம் 3,4: முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய கடுமையாக முயற்சிப்பீர்கள். சதயம்: முயற்சி இழுபறியாகும். உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் சில செயல்கள் நடக்கும். பூரட்டாதி 1,2,3: மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சி நண்பர்கள் உதவியுடன் இன்று நடந்தேறும். உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். மனம் மகிழும்படியான சம்பவம் நடைபெறும். ரேவதி: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடி வரும்.