எலான் மஸ்க் டுவிட்டர் இலச்சினையை நிரந்தரமாக மாற்றவுள்ளார்
உலக முதல்தர பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுத்தினை வாங்கி அதில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்தார்.
பணி நடைமுறைகள் சார்ந்து புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
இந்நிலையில், டுவிட்டரின் இலச்சினையை மாற்ற இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். சிறந்த இலச்சினை கிடைக்கும் பட்சத்தில் அன்று இரவே டுவிட்டரின் இலச்சினை மாற்றப்பட்டு விடும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டரின் அடையாளமான நீலக் குருவி இலச்சினைக்குப் பதிலாக டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை இலச்சினையாக வைத்தார்.
எவ்வாறயினும், மீண்டும் அவர் நீலக் குருவி இலச்சனையை கொண்டு வந்த பிற்பாடு இப்போது டுவிட்டர் இலச்சினையை அவர் நிரந்தரமாக மாற்றி விட எண்ணி அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.