இலங்கையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #Lanka4
Thamilini
2 years ago
இலங்கையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்!

இலங்கையின் பலப் பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இதன்படி  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், இலங்கையின் மற்ற பகுதிகளில் மழை இல்லாத வானிலை தென்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில், மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

மணிக்கு 40 கிலோமீற்றர்  வேகத்தில் காற்று வீசும். இடி,மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4