சுற்றறிக்கை மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு! சுகாதார தொழிற்சங்கங்கள்

#SriLanka #strike #Lanka4 #Health Department
Kanimoli
2 years ago
சுற்றறிக்கை  மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு! சுகாதார தொழிற்சங்கங்கள்

ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய(25) தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

 குறித்த சுற்றறிக்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்தி நேற்று(24) மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் கடந்த சனிக்கிழமை குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

 திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4