துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' படக்குழு விரைவில் முதல் பாடல் வெளியீடு

#India #Cinema #Actor #Actress #Director #Kerala #Movie
Mani
2 years ago
துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' படக்குழு விரைவில் முதல் பாடல் வெளியீடு

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங் ஆஃப் கோதா’. இது ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், ஜேக்ஸ் பிஜோய் மற்றும் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளனர்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'கிங் ஆஃப் கோதா' டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தின் ஆரம்பப் பாடலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4