கங்குவா திரைப்படத்தின் சூர்யா வித்தியாசமான தோற்றம்

#India #Cinema #Actor #TamilCinema #Tamilnews #ImportantNews #Movie
Mani
2 years ago
கங்குவா திரைப்படத்தின் சூர்யா வித்தியாசமான தோற்றம்

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் பத்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். குதிரையில் செல்லும் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அது வைரலாகிறது. இந்த கதாபாத்திரத்துக்காக சூர்யா பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேக்கப்பை கலைக்கவும் அதிக நேரம் ஆகிறதாம்.

அடுத்த வருடம் கங்குவா படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். 1,500 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். கங்கு என்றால் நெருப்பு என்றும் நெருப்பின் மகன் என்ற அர்த்தத்தில் படத்துக்கு கங்குவா என்று பெயர் வைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சூர்யா வேடத்தில் திஷாபதானியும், வில்லனாக பாபி தியோலும் நடிக்கும் இந்தப் படம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படமாக்கப்படுகிறது. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட மேலும் பலரும் நடிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4