வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும் கும்ப ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் மதியத்திற்கு மேல் லாப நிலை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். கார்த்திகை 1: பணியில் உள்ள நெருக்கடி விலகும். பிறரை நம்பி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். மகிழ்ச்சி கூடும். ரோகிணி: விரும்பிய வகையில் செயல்பட்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியே நன்மைகள் அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: அடுத்தவர் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பிள்ளைகள் வழியில் நன்மை அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர்கள். வருமானத்தில் இருந்த தடை அகலும். புனர்பூசம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் கூடும். குடும்பப் பிரச்னை தீரும். சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப் போகும். பூசம்: குடும்பத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி அனுகூலமாகும். விலகிச்சென்ற உறவுகள் தேடி வருவார்கள். ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைக் காண்பீர்கள். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்

மகம்: உங்களுக்கு விருப்பமான ஒருவரை இன்று சந்திப்பீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள். பூரம்: வியாபாரத்தின் நுணுக்கங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். உத்திரம் 1: தன்னம்பிக்கை அதிகரிக்கும். செலவுகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசிப்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: சொத்துப் பிரச்னை உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் ஈடுபடும் செயல்கள் லாபமாகும். அஸ்தம்: உங்கள் சுய ஆற்றல் இன்று வெளிப்படும். துணிச்சலாக செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சித்திரை 1,2: எதிரிகளால் உண்டான நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு. சுவாதி: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த செய்தி வரும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: மனதில் தேவையற்ற சிந்தனை உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டாம். அமைதி காப்பது நல்லது. கேட்டை: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

தனுசு

மூலம்: வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நீங்கள் ஈடுபடும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். பூராடம்: எதிர்கால நலனை கருதி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்திராடம் 1: கேளிக்கை, சந்தோஷம் என்று செலவுகள் செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று சந்திப்பீர்கள். திருவோணம்: உங்கள் செயல்களை பிறர் பாராட்டுவர். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பர்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பொது நலனில் கவனம் செல்லும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். சதயம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பூரட்டாதி 1,2,3: மற்றவர்களுக்காக உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழிபாட்டில் மனம் செல்லும்.

மீனம்

பூரட்டாதி 4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். உத்திரட்டாதி: வேலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். ரேவதி: திட்டமிட்டிருந்த ஒரு வேலையை முடிக்க முடியாமல் மனம் சங்கடமடையும்.