மெட்டா நிறுவனத்திற்கு 20 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்த ஆஸ்திரேலியா
பேஸ்புக் இன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அபராதத் தொகையை அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேஸ்புக் இன் தாய் நிறுவனம் அறிமுகப்படுத்திய விசிட் இஸ்ரேல் , தற்போது நிறுத்தப்பட்டுள்ள ஒனாவோ செயலி மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சரியான அறிவு இல்லாமல் சேகரிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பயனாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை மெட்டாவுக்கு பரிந்துரைத்துள்ளது.
மேலும் இந்த செயலி 271,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.