ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 'ரெட் அலார்ட்' என இந்திய வானிலை மையம் தகவல்

#India #Rain #HeavyRain #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு 'ரெட் அலார்ட்' என இந்திய வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழையின் காரணமாக வட மாநிலங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கக்கடலில் மையம் கொண்டு தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதையடுத்து, தெலுங்கானா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 2 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது.

இதன்காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கணிசமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.