ஹிண்டன் ஆற்றின் வெள்ளம் 200 கார்களை மூழ்கடித்தது

#India #Delhi #Rain #HeavyRain #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
ஹிண்டன் ஆற்றின் வெள்ளம் 200 கார்களை மூழ்கடித்தது

டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்லி அருகே உள்ள உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மற்றும் நொய்டா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு யமுனையின் கிளை நதியான ஹிண்டன் நதி உள்ளது.

ஹிண்டன் ஆறு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி நொய்டா பகுதியில் யமுனையில் இணைகிறது. இதனால்தான் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நொய்டா பகுதிகளை பாதித்துள்ளது. இந்தப்பெருவெள்ளம் நொய்டா ஈகோடெக் பகுதி-3 அருகே உள்ள ஒரு கார் நிறுவன வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன. ஹிண்டன் ஆறு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி நொய்டா பகுதியில் யமுனையில் இணைகிறது. இதனால்தான் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நொய்டா பகுதிகளை பாதித்துள்ளது. இந்தப்பெருவெள்ளம் நொய்டா ஈகோடெக் பகுதி-3 அருகே உள்ள ஒரு கார் நிறுவன வளாகத்துக்குள் புகுந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 200-க்கும் மேற்பட்ட கார்கள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த காட்சிகள் நேற்று வீடியோவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக 2 நாட்களுக்கு முன்பு 2 சிறுவர்கள் ஹிண்டன் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். வெள்ள பாதிப்புகளை குறைக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.