அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அரசு வழியில் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும் சிம்ம ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: மதியம் வரை உங்கள் முயற்சி வெற்றியாகும் அதன்பின் செயல்களில் நிதானம் அவசியம். பரணி: உங்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவதால் நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த ஒன்று தள்ளிப்போகும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டிருந்த முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: நண்பர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி ஆதாயமாகும். தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வழக்கமான செயலில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: விஐபிகள் ஆதரவால் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும். திருவாதிரை: விரைந்து செயல்பட்டு ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். புனர்பூசம் 1,2,3: எதிர்ப்புகள் விலகும். மதியத்திற்கு மேல் புதிய முயற்சி ஒன்றில் கவனம் செலுத்துவீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உறவினர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். பூசம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர்கள். ஆயில்யம்: உங்களது முயற்சி ஒன்று தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபடாதீர்கள்.

சிம்மம்: 

மகம்: அரசு வழியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப்போகும். கணக்கு வழக்கில் கவனம் தேவை. பூரம்: அரசுப்பணியாளர்களுக்கு சக பணியாளர்கள் மறைமுகமாக தொல்லை அளிப்பர். எச்சரிக்கை அவசியம். உத்திரம் 1: வரவு அதிகரிக்கும் என்றாலும் வியாபாரத்தில் சில நெருக்கடிகள் உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். சகோதரர்களால் உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். அஸ்தம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கடன்களால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சித்திரை 1,2: பல நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று எளிதாக நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: காலையில் இருக்கும் குழப்பம் மாலையில் மறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுவாதி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வேலை வாய்ப்பிற்குரிய முயற்சி வெற்றியாகும். விசாகம் 1,2,3: நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: முயற்சியில் மதியம் வரை குழப்பம் இருக்கும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். அனுஷம்: பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு சகபணியாளர்களுடன் பிரச்னைகள் ஏற்படும். கேட்டை: அவசர வேலைக்காக பிறரது உதவியை எதிர்பார்ப்பீர்கள். எதிர்பார்த்த பணம் மாலையில் கிடைக்கும். 

தனுசு

மூலம்: மதியம் வரை வரவு இருக்கும். அதன்பின் செலவு அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். பூராடம்: சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். உத்திராடம் 1: எதிர்பாராத சங்கடங்களை இன்று சந்திப்பீர்கள். இருந்தாலும் போட்டிகளை சமாளிப்பீர்கள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: புதிய நட்பின் வழியே உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். அவிட்டம் 1,2: பழைய முதலீட்டில் இருந்து இன்று ஆதாயம் தோன்றும். அதிர்ஷ்டமான நாள். 

கும்பம்

அவிட்டம் 3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். சதயம்: பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் உண்டு. பூரட்டாதி 1,2,3: உங்கள் முயற்சி இன்று லாபத்தை ஏற்படுத்தும். நண்பர்கள் உதவியால் ஒரு பிரச்னை தீரும். 

மீனம்

பூரட்டாதி 4: நெருக்கடியை உண்டாக்கி வந்த ஒரு பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள். குழப்பம் நீங்கும். உத்திரட்டாதி: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ரேவதி: மதியம் வரை உங்கள் முயற்சியில் நெருக்கடிகள் உண்டானாலும் அதன்பின் நிலைமை சீராகும்.