சுவிஸில் அதிகரிக்கும் நகைக் கொள்ளைகள்: தமிழர்களே அவதானம்!
தமிழர் வீடுகள் உடைத்து களவுகள் எடுக்கப்படுவது தற்போது வாடிக்கையாகியுள்ளது. இதற்கு தமிழர்களே உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அது சுவிஸ் நாட்டிலும் அரங்கேறியது இப்போது சுவிஸ் பொலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பாதுகாப்பு நிறைந்த சுவிஸ் நாட்டில் ..! தற்போது தங்கச்சங்கிலி அறுப்புக்கள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளது!
சொலத்தூண் பிரதான புகையிரத நிலையத்தில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஈழத்தமிழருக்கு இருவர் வந்து உன் சூலேசைப்பார் என கையைக்காட்ட அவர் குனிந்து காலலணியைப்பார்க்கும் நொடிப்பொழுதில் அவர் கழுத்தில் ஒருவர் கையால் இடிக்க மற்றவர் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.
அதேபோல் அதே நாள் கெர்லபிங்கன் Lidl கடையில் 16 வயது பையனோடு பொருட்கள் வாங்கச்சென்ற ஈழத் தமிழ்த் தாயொருவர் கடைக்குள் வேறு பக்கம் பொருட்களைப் பார்த்துக் கொண்டு நிற்க்க பையனின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியைக் கண்ட ஒருவர் கழுத்தில் கைகளால் இடித்துவிட்டு பையன் நிலைதடுமாறும் கண நேரத்தில் சங்கிலியை அறுத்துள்ளனர் .
ஆனால் அந்தப் பையனின் கழுத்தில் மேல் மருவத்தூர் அம்மனின் சிவப்பு நூல் அம்மா டாலர் கிடந்ததால் அறந்த சங்கிலி அந்த நூலில் சிக்கி களவாணிகளின் கைகளுக்கு கிட்டவில்லை!
நூலில் சிக்குண்ட நிலையில் தங்கச் சங்கிலி பறிபோகவில்லை! அந்தப்பையன் குளறி அழ கடையைவிட்டு வேகமாக ஓடிவிட்டான் கள்வன். கீழேயுள்ள இந்த இளைஞருக்கு பாசல் நகரில் இச்சம்பவம் நடைபெற்றது !
வேறு மாநிலத்தில் இருந்து வந்த இவர் திருமணமண்டப அலங்கார வேலைகளைப் பார்க்கும்பொது மண்டப வாயில் ஒளித்திருந்து நோட்டமிட்டு விட்டு தனியாக குறிப்பிட்டநபர் தனதுவாகனம் நோக்கி வரும்போது ஒருவர் வந்து பின்னால் கட்டிப்பிடிக்க இன்னொருவர் அவரது முழங்கால் பின்பக்கம் உதைந்து சங்கிலியை அறுத்து எடுத்துள்ளனர் பலசாலியான தமிழரானஅவர் அவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்து அவரது கைபேசியை பறித்துள்ளார்.
அவர்கள் இருவரும் தப்பி ஓடும்போதும் மண்டபத்தில் இருந்த தமிழ் நண்பர்கள் இருவர் துணையோடு துரத்திச் சென்றுள்ளனர் . ஆனால் அவர்கள் போத்தலை உடைத்து இவர்களை கொலை செய்யப் பார்த்த வேளை கைபேசியை வைத்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என விட்டுள்ளனர் .
காவல்துறையினர் தலத்துக்கு வந்து 4 மணிநேரத்துக்கு மதிக்கமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் . பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்த இளைஞர்களுக்கு பின்னால் தமிழர்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கச்சங்கிலி மொத்தமாக இருந்ததால் அவரது கழுத்தும் அறுபட்டுள்ளது. ஆகவே அன்பான எம்தமிழ் உறவுகளே ..! தங்கம் தமிழரின் ஆபரணம்தான் . வங்கிகள் வருவதற்கு முன்னைய காலத்தில் தங்கமாக வாங்கிச் சேமித்தால் பின்னுக்கு கஷ்டம் வாழ்க்கையில் வரும் காலங்களில் விற்றேனும் அதிலிருந்து மீண்டெழலாம் என்பதற்காக தங்கத்தை வாங்கி சேமிக்கச் சொன்னார்கள் .
ஆனால் இந்தக்காலத்தில் நவீனமாக உலகம் இருக்கும் போதும் பழைய சிந்தனாவாதங்கள் இக்காலத்திற்குதவாதெனப் புரிந்து நவீன சிந்தனைகளை புரிந்து வாழப்பழகிக் கொள்ளுங்கள் .
தங்கத்தை வாங்க விரும்பினால் வங்கியிலேயே தங்கத்தை தங்க பிஸ்கற்றுக்களாகவோ ,தங்கக்கட்டிகளாகவோ வாங்கி வங்கியிலேயே வைத்துக் கொள்ளுங்கள் செய்கூலி சேதாரம் ஏதுமின்றி அதிகலாபத்தையும் ஈட்டுவீர்கள் தேவைப்படும் பட்சத்தில் அதை வாங்கி நகைகளாகவும் செய்துகொள்ளலாம் .
அதைவிடுத்து நகைப் பைத்தியங்களாகி உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ,உங்கள் உறவுகளுக்கும் கூட பாதுகாப்பான சுவிஸ்போன்ற தேசத்திலேயே உயிர்களை காவுகொடுக்க உங்கள் உழைப்பைக் கொடுக்காதீர்கள்!
இதைவிட உலகில் எங்கேனும் முட்டாள்தனமுண்டா? என்பதை ஆழ்ந்து யோசியுங்கள் . சுவிஸ் நாட்டில் விசாவின்றி ஆர்மேனியர்கள் பலரை ஒரு வீட்டில் சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்து அனைவரையும் கூண்டோடு கைதுசெய்துள்ளனர் .
இவர்கள் களவு செய்வதில் கைதேர்ந்தவர்களாவர் . தமிழர்கள் தலையணை, நிலக்கீழ் அறை , அலமாரி சேலைகளுக்குள் பிஸ்கற்ரின்களுக்குள் , மிகாய்த்தூள் போத்தல்களுக்குள் எல்லாம் தங்க நகைகளை வைத்திருப்பதெல்லாம் கள்வர்களுக்குத் தெரியும் .
அத்தோடு நிலத்தின்கீழ் புதைந்துகிடக்கும் தங்கம் பணம் முதலியவற்றை எளிதில் கண்டுபிடித்து ஒலியெழுப்பும் மின்சாதனக்கருவிகள் அவர்களிடமுண்டு என்பது உங்களுக்குத் தெரியாதிருந்தால் நாம் எவ்வளவுதூரம் இன்னும் அறிவார்ந்த நாடுகளில் அறிவிலிகளாக வாழ்கிறோம் என்பது கண்கூடாகும் .
யூடூப்பில் இளைஞர்கள் அதீத உடற்பயிற்சியால் ஒருகட்டிடத்தில் இருந்து தாவி மறு கட்டிடங்களுக்கு தாவிப்பாய்ந்து ஓடும் காணொளிகளை கண்ணுற்றிருப்போம் அப்படி பயிற்சிபெற்ற ஆர்மேனியர்கள் , அல்பானியர்கள் , என பல ஐரோப்பிய நாட்டவர்கள் சுவிஸுக்குள் உள் நுளைந்திருக்கிறார்கள். ரஷ்யா, உக்ரைன் சண்டையால் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் உலகில் வளர்முக நாடுகளிலேயே பல நாடுகளில் பஞ்சம் தலைவிரித்தாடத்தொடங்கியுள்ள வேளையில் ..தமிழர்களே உங்கள் இரத்தம் வியர்வை சிந்தி உழைத்த உழைப்பை வீணாக இழக்காதீர்கள் ..!
தற்போது சுவிஸ் நாட்டில் வேக வீதிகளில் யாராவது உதவிகேட்டால் நீங்கள் அவர்களுக்கு உதவாதீர்கள் ! அதற்கென அவசர உதவிக்கென நொடிப்பொழுதில் உதவிட சுவிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒழுங்கமைப்புக்கள் உண்டு!
இரவு நேரங்களில் மிகஅவதானமாக வேலை முடிந்து வருவோர் உங்கள் பாதுகாப்பை நீங்களேஉறுதிப்படுத்தல் அவசியமாகும் . சிலர் பகல் வேளைகளில் கூட தமது வாகனம் நிறைய பெண்கள் குழந்தைகளோடு நிறைய தங்க நகைகளை தமது கழுத்தில் அணிந்தபடி தமது வாகனத்திற்கு பெற்றோல் இல்லை தாம் தொடர்ந்து பயணிப்பதற்கு பணம்தந்துதவு மாறும் நீலிக்கண்ணீர் வடிக்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் திரிகிறார்கள் .
இங்கு வாகனம் பெற்றோல் இல்லாமல் நின்றால் TCS ற்கு போன் செய்தால் உதவ விரைந்து வருவார்கள் . நீங்கள் உதவிடவேண்டியதில்லை! கழுத்து நிறைய நகை அணிந்துள்ள அவர்களிடம் பணமோஅல்லது கிறடிற்காட்டோ இல்லாமல் இருப்பது எப்படி என என்றாவது நாம் அவர்களுக்கு உதவுமுன் கேள்வி கேட்கிறோமா?
இப்படி அண்மையில் சுவிஸில் நடைபெற்ற சம்பவம் ஒன்றுண்டு ஒரு தமிழர் அவர்களின் நிலைகண்டு 50sf கொடுத்து உதவியுள்ளார் . வாகனத்தில் இருந்த அவர்களில் ஒரு பெண்மணி கீழே இறங்கி தனது கழுத்தில் கிடந்த மொத்தமான தங்கச் சங்கிலியை தமிழரின் கழுத்தில் போட்டுள்ளார் . அந்தத்தமிழரோ இல்லை தனக்குத் தேவையில்லை எனக்கூறியதும் அவர் தான் போட்ட தங்கச்சங்கியியை எடுக்கும்போது தமிழரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியையும் சேர்த்து களற்றி எடுத்துவிட்டார்கள் !
வீட்டில் வந்து பார்த்தால் அவர் சங்கிலியும் போய் 50 sf கும் போய்விட்டது . எப்படி ஏமாளிகளாகிறோம் நாம் என உணர்ந்துகொள்வோமா?அந்தப்பணத்தை 50sf=17.500/= இலங்கையில் உள்ள ஒரு வாழ்வாதாரம் பாதிக்கப்பட ஒரு குடும்பத்திற்கு உதவியிருந்தால் பெரும் புண்ணியமாவது கிடைத்திருக்கும் .
இதை எப்போது மனிதாபிமானமாக எம் இனம்சார்ந்து சிந்தித்திட நினைப்போம் . நிலத்தை மறக்கலாமா? எம் இனத்தை மறக்கலாமா? சொல்வது நான் தீர்மானிப்பது நீங்கள் ..!
இளைய தலைமுறைப் பிள்ளைகளே நீங்களாவது நகை ப்பைத்தியத்தில் இருந்து மீண்டெழுவீர்களாக.! நாம் நாமாக வாழ்தலே நன்று..!
தீராக்கனவுடன் : தீவகன்