சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.140 ஆக உயர்வு
#Vegetable
#supermarket
#Tamilnews
#Chennai
Mani
1 year ago
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று தக்காளி கிலோ ரூ.110க்கு விற்கப்பட்டது. தக்காளியின் விலை எதிர்பாராதவிதமாக ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சில்லரை விற்பனையில் இன்னும் விலை அதிகரிக்க கூடிய சூழல் காணப்படுகிறது. இதன்படி, சில்லரை விற்பனை கடைகளில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது.
1,100 டன் தக்காளி தேவைக்கு 400 டன் மட்டுமே வரத்து உள்ளதால், தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், இஞ்சி கிலோ ரூ.250 வரையிலும், பட்டாணி ரூ.200 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.