காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் அமர்நாத் யாத்ரீகர்கள் அவதி

#India #Delhi #Rain #HeavyRain #Tamilnews #Mountain
Mani
1 year ago
காஷ்மீரில் பெய்து வரும் கனமழையால் அமர்நாத் யாத்ரீகர்கள் அவதி

ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பனிலிங்கத்தை தரிசிக்க இமயமலையின் தெற்கு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைகளுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். 61 நாட்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை தொடரும். இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி நிறைவடையும்.

ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் 350,000க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.நேற்று ஒரே நாளில் 11,000 பேருக்கு சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது இதுவரை மொத்தம் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 3,111 பேர் அடங்கிய அடுத்த குழு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அதில் பால்தால் மற்றும் பஹல்காம் வழியாக 2,303 ஆண்கள், 750 பெண்கள், 11 குழந்தைகள், 47 சாதுக்கள் சென்றுள்ளனர். இந்த இரண்டு பாதையிலும் கனமழை பெய்து வருவதால், பலத்த பாதுகாப்புடன் யாத்ரீகர்கள் குகைக் கோயிலை நோக்கி சென்றனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் குகைக்கு செல்லும் பாதையில் உள்ள கெல்னாரில் பாலம் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அது உடனடியாக சீரமைக்கப்பட்டதாகவும் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் வசதிக்காக இரண்டு பாதையிலும், ஹெலிகாப்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 1ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.