துலா ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
துலா ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

துலாம் ராசியினர் அணிய வேண்டிய மோதிரமானது வைரம் பதித்த கல். துலாம் ராசியினர் வைரம் பதித்த மோதிரத்தினை அணிவதால் குடும்பத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்கும். 

மன திடத்தை அதிகரிக்கும். இதன் மூலம் தேவையற்ற பயங்கள் விலகும். வைரம் பதித்த மோதிரமானது மகிழ்ச்சியும், யோகத்தையும் தரக்கூடியது. மேலும் வைர மோதிரமானது வசீகரத்தையும், நெஞ்சுறுதியையும் தரும். தன்னம்பிக்கை இல்லாதவரிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் .

ஆண், பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தை கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை போக்கும். தொழில் செய்வதற்கு வெளிநாடு செல்ல யோகம் கிடைக்கும். 

பிறரிடம் உங்களுடைய மதிப்பானது உயரும். வைர மோதிரமானது நல்ல உடல் பலத்தை கொடுக்கும். இந்த வைரம் பதித்த மோதிரத்தினை சுக்கிர தசை நடப்பவர்கள் தாராளமாக அணியலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4