மூன்று ராசியினருக்கு மிகப்பெரிய யோகம் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
மூன்று ராசியினருக்கு மிகப்பெரிய யோகம் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். பரணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும். கார்த்திகை 1: மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நண்பர்கள் உதவியால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். மகிழ்ச்சி கூடும். ரோகிணி: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். மிருகசீரிடம் 1,2: வாழ்க்கைத் துணையிடம் உண்டான சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தை பேசி தீர்ப்பீர்கள். சகோதரர்களின் உதவி உண்டு. திருவாதிரை: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். புனர்பூசம் 1,2,3: புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள். பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.

கடகம்:

புனர்பூசம் 4: முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். ஆயில்யம்: செயல்களில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர் ஆதரவுடன் நீண்டநாள் முயற்சி ஒன்று அனுகூலமாகும்.

சிம்மம்

மகம்: குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர் புதிய சொத்து வாங்குவீர்கள். பூரம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு உண்டு. உத்திரம் 1: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை தீரும். அஸ்தம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். சித்திரை 1,2: வியாபாரத்தில் உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். நிதிநிலை உயரும்.

துலாம்: 

சித்திரை 3,4: பண வரவு அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். சுவாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை நண்பர்கள் ஆதரவுடன் சரி செய்வீர்கள். வருமானம் கூடும். விசாகம் 1,2,3: எதிர்பாராத வருவாயை அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: எதிர்பார்த்த உதவி வந்து சேரும். மனதை அலைபாய விடுவதால் சில சங்கடங்கள் ஏற்படும் அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கேட்டை: பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

தனுசு:

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். கவனமுடன் செயல்படவும். பூராடம்: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்திராடம் 1: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மகரம்: 

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர்கள். திருவோணம்: எதிர்பாராத வரவு வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் உண்டாகும். 

கும்பம்:

அவிட்டம் 3,4: வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். சதயம்: கூட்டுத் தொழிலில் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: உங்கள் செயலில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர்கள். 

மீனம்

பூரட்டாதி 4: சங்கடம் விலகும். தந்தை வழி உறவுகள் ஆதரவுடன் முயற்சியில் லாபம் காண்பீர்கள். உத்திரட்டாதி: உடல் நிலையில் இருந்த சங்கடம் தீரும். அலுவகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரேவதி: வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பெரியோரின் ஆலோசனை நன்மை தரும்.