தனி அங்கீகாரத்தை உருவாக்கிய தனுஷின் 5 படங்கள்
தன் திறமைக்கான வாய்ப்பினை தேடி தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு தற்போது முன்னணி ஹீரோவாய் வலம் வரும் நடிகர் தான் தனுஷ். இந்நிலையில் இவரின் நடிப்பை, ஹாலிவுட் அளவிற்கு கொண்டு சேர்த்த 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.
மரியான்: 2013ல் பரத் பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மரியான். இப்படத்தில் தனுஷ், பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வேலைக்காக செல்லும் மக்களை பிணை கைதிகளாக மேற்கொள்ளும் செயல்கள் மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தும் விதமாய் அமைந்து, இப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மயக்கம் என்ன: 2011ல் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பெரிதும் பேசப்பட்ட படம் தான் மயக்கம் என்ன. இப்படத்தில் தனுஷ், ரிச்சா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். போட்டோகிராப் மீது ஆர்வம் கொண்ட தனுஷ், ஒரு கட்டத்தில் வெறித்தனமாய் மாறி அதன்பின் தன் இலக்கை அடைவது போல் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும்.
ஆடுகளம்: 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் ஆடுகளம். இப்படத்தில் தனுஷ், டாப்ஸி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தனுஷ் நடிப்பில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் வெற்றிமாறனின் கேரியர் பெஸ்ட் மூவியாய் அமைந்தது.
அசுரன்: 2019ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அசுரன். இப்படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இரு சமூகத்தினரிடம் ஏற்படும் பிரச்சனையில் தன் மகனை துளைத்து நியாயம் தேடும் சிறந்த தந்தையாய் தன் நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் தனுஷ். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. மேலும் இவரின் நடிப்பு ஹாலிவுட்டையே மிரள வைத்தது என கூறலாம்.
வடசென்னை: 2018ல் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆக்சன் படமாய் வெளிவந்த இப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி, அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கேங்ஸ்டராய் தனுஷ் ஏற்ற கதாபாத்திரம் மக்களை கவர்ந்த ஒன்றாகும். இப்படமும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் மிகுந்த வெற்றியை கண்டது.