வடிவேலு 'சந்திரமுகி 2' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்
சந்திரமுகி முதல் பாகம் வெற்றி தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து “சந்திரமுகி 2” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பி.வாசு படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வடிவேலு மற்றும் பல திரையுலக நட்சத்திரங்களும் இதில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை படக்குழுவினர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 'சந்திரமுகி 2' திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி, நடிகர் வடிவேலு படத்தின் டப்பிங் பேசி முடித்துள்ளார். இதனை படக்குழுவினர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளனர். மேலும், விரைவில் அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.