கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவை நிறுத்தம் போக்குவரத்துக் கழகம்

#India #government #Bus #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவை நிறுத்தம் போக்குவரத்துக் கழகம்

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூரில் நடைபெற்று வரும் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும்,என்.எல்.சி வெளியேற்றத்தை வலியுறுத்தியும் இன்று நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது.

ஒருசில பாமகவினர் உள்ளே செல்ல முயன்றபோது, போலீசின் தடுப்பை மீறி முன்னேறிச் செல்ல முயன்றபோது, போலீசாருக்கும் பாமகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது.

காவல்துறையினர் மற்றும் பாமகவினர் இடையே மாறி மாறி கற்கள் வீசித் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தடியடி நடந்து வருகிறது. இதில், ஒரு போலீஸ் காரரின் மண்டை உடைந்தது. அவரை சக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

பாமகவினரின் முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீஸார் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இந்த இடம் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் கடலூர், நெய்வேலிக்கு நேரில் ஆய்வு செய்ய செல்கிறார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்தை உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் வீடு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

பாமக போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, போக்குவரத்துக் கழகம் வாய்மொழியாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!