விருச்சிக ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
விருச்சிக ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

விருச்சிக ராசியினர் அணிய வேண்டியது பவள மோதிரம். 

செவ்வாய் மற்றும் கேது தசை நடப்பவர்கள் கூட இந்த பவளம் மோதிரம் அணியலாம். பவள மோதிரம் அணிவதால் தெய்வ கடாட்சம் உண்டாகும். கோபம் குறையும்.

மேலும் அதிர்ஷ்டம் பெருகும். மனதில் உள்ள பயத்தினை நீக்கி நல்ல துணிச்சலை தரும். விருச்சிக ராசியினர் பவள மோதிரத்தினை அணிவதால் பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களை நீக்கி நல்ல ஞானத்தை கொடுக்கும். மேலும் பயத்தை போக்கும்.

தொழில் செய்யும் வாய்ப்புகள் பெருகும். மனதில் உள்ள வெறுப்பு மறைந்து அன்பு பெருக்கெடுக்கும். பேச்சு திறன் அதிகரிக்கும். தெய்வ அனுகூலங்கள் கிட்டும். குழந்தைகளின் அறிவு அதிகரிக்கும். 

தன்னம்பிக்கை உயர்ந்து செயல்படும் அனைத்து செயல்களும் வெற்றி அடையும். கேது தசை நடப்பவர்கள் இந்த பவள மோதிரம் அணிவதால் பதவி உயர்வு கிடைக்கப்பெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4