பணியிடத்தில் சிக்கல்களை எதிர்த்து முகம் கொடுக்கும் மூன்று ராசியினர் , அதிலும் விருச்சிக ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பணியிடத்தில் சிக்கல்களை எதிர்த்து முகம் கொடுக்கும் மூன்று ராசியினர் , அதிலும் விருச்சிக ராசியினருக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்: 

அசுவினி: இரண்டு நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சிகள் பெரியோர் ஆதரவால் இன்று நிறைவேறும். பரணி: கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கார்த்திகை 1: உங்கள் முயற்சியின் காரணமாக அரசு வழியில் தடைபட்டிருந்த வேலைகள் முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் வீண் பிரச்னை தோன்றும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். செலவுகளை வருமானத்தால் சமாளிப்பீர்கள்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். லாபத்திற்குரிய வழிகள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

கடகம்

புனர்பூசம் 4: பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். பூசம்: சுறு சிறப்பாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் செயலுக்கு வரவேற்பு உண்டாகும். ஆயில்யம்: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மகம்: நீங்கள் எதிர்பார்த்தவை நடந்தேறும். தொழிலில் புதிய தொடர்புகள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். உத்திரம் 1: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் ஏற்படும். அஸ்தம்: உடல் நிலை சரியாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். சித்திரை 1,2: திடீர் பயணம் ஏற்பட்டு அலைச்சலை உண்டாக்கும் என்றாலும், உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. சுவாதி: வேலைக்காக எதிர்பார்த்த செய்தி வரும். உங்கள் அறிவாற்றலால் நிதிநிலையில் உயர்வு உண்டாகும். விசாகம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்தவை நிறைவேறும். விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களை விட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவார்கள். அனுஷம்: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். கேட்டை: நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு குறித்த செய்தி வரும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

தனுசு

மூலம்: மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். உங்கள் பிரச்னைகளை பிறரிடம் கொண்டு செல்ல வேண்டாம். பூராடம்: சிலர் உங்களை சீண்டிப் பார்க்க முயற்சிப்பார்கள். எந்த நிலையிலும் அமைதியை இழக்காதீர்கள். உத்திராடம் 1: வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: திடீர் செலவுகள் தோன்றி நெருக்கடியை உண்டாக்கும். பயணத்தினால் அலைச்சல் கூடும். திருவோணம்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை ஏற்படுத்துவர். குழந்தைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். அவிட்டம் 1,2: உங்கள் செயல்களில் சில நெருக்கடிகள் தோன்றும். புதிய முயற்சி ஒன்று தள்ளிப் போகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். மற்றவர் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர்கள். சதயம்: புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சி இன்று லாபமாகும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உத்திரட்டாதி: நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ரேவதி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும்.