ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கழுதை பால் விலை லிட்டருக்கு ரூ.8000 ஆக உயர்வு

#India #Health #children #people #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கழுதை பால் விலை லிட்டருக்கு ரூ.8000 ஆக உயர்வு

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கழுதைப் பால் விற்பனை செய்யப்படுகிறது. குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுதைப்பால் அதிக மருத்துவ குணம் கொண்டது என்று அவர்கள் கருதுகின்றனர்.

கழுதைபால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றனர். தற்போது விலை ஏற்றம் அடைந்து, லிட்டர் ரூ.8000 வரை விற்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் போயபாலம் சந்திப்பு பகுதியில் மொத்தம் 10 கழுதைகளை வைத்திருந்த நான்கு குடும்பங்கள் கழுதைப்பால் விற்பனை செய்து வந்தனர்.

நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம். ஒரு லிட்டர் ரூ.8,000-க்கு மொத்தமாக விற்கிறோம். ரூ.1,000 தள்ளுபடி தரலாம். ஒரு கழுதை ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறோம். நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வணிகத்திற்காக விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு வருவோம், என்றனர்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கழுதைப் பாலில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்து, 75 மிலி வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். இங்கே கழுதையிலிருந்து புதிதாகப் பால் கறந்த பச்சைப் பாலை அந்த இடத்திலேயே குடித்து திருப்தியடைந்தேன். விற்பனையாளரிடம் ரூ.500 டிஜிட்டல் பேமெண்ட் செலுத்தினேன் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4