அஜித்துடன் மீண்டும் இணையும் தமன்னா?

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Director #Tamilnews #Movie
Mani
2 years ago
அஜித்துடன் மீண்டும் இணையும் தமன்னா?

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடா முயற்சி' படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தனர். பொன்னியின் செல்வன் படத்தின் புகழ் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் லியோ பட வாய்ப்பும் இந்த படத்தினாலேயே அவருக்கு வந்தது.

இந்நிலையில் அஜித்துடன் விடா முயற்சி படத்தில் நடிக்க தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா ஆடிய நடனத்துக்கு வரவேற்பு கிடைத்தது. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடரில் கவர்ச்சியாக நடித்தும் பேசப்பட்டார்.

இதனாலேயே திரிஷாவுக்கு பதில் தமன்னாவை நாயகியாக்க படக்குழுவினர் விரும்புவதாக கூறப்படுகிறது. கதாநாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும். இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் அஜித்துடன் தமன்னா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4