ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நடிகர் சந்தானத்திற்கு பாராட்டு

#India #Tamilnews
Mani
2 years ago
ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நடிகர் சந்தானத்திற்கு பாராட்டு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நடிகர் சந்தானத்தை 'டிடி ரிட்டர்ன்ஸ்' படக்குழுவினர் நேரில் சந்தித்துப் பாராட்டினர்.

இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் சந்தானம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4