இரும்பு சத்துஅதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் செய்வது எப்படி
#India
#Recipe
#Cooking
#Tamilnews
Mani
1 year ago
தேவையான பொருட்கள்:
- 1 கப் ஆட்டு ரத்தம்
- கைப்பிடி கடலைப்பருப்பு 1 கப் தேங்காய் துருவல்
- 1 தேக்கரண்டி சோம்பு
- 1 பெரிய வெங்காயம்
- 6 பல் பூண்டு
- கறிவேப்பிலை சிறிது
- உப்பு தேவைக்கு
- மஞ்சள் தூள் சிறிது
- 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
- மல்லித் தூள் சிறிது
- எண்ணெய் தாளிக்கதேவையான அளவு
- 1 துண்டு பட்டை
செய்முறை:
- இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும்.
- கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
- வேகவைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
- சுவையான ரத்தப்பொரியல் தயார்.