மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின் போது இயந்திரம் ஒன்று விழுந்ததில் 14 தொழிலாளர்கள் பலி

#India #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
மகாராஷ்டிராவில் பாலம் கட்டும் பணியின் போது இயந்திரம் ஒன்று விழுந்ததில் 14 தொழிலாளர்கள் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் பயன்படுத்தப்படும். எதிர்பாராதவிதமாக, மிகப்பெரிய இயந்திரம் சரிந்து விழுந்ததில், பணியில் ஈடுபட்டிருந்த 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மும்பை- நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலையாக இந்த சாலை கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை நாக்பூர், வாசிம், வர்தா, அகமதாபாத், பல்தானா, அவுரங்கபாத், அமாரவதி, ஜல்னா, நாஷிக் மற்றும் தானே மாவட்டங்களை கடந்து செல்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசால் இந்த சாலை கட்டப்பட்டு வரும் இந்த சாலைக்கு சம்ருதி மஹாமார்க் என பெயரிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!