சுவிட்சலாந்தில் சுவாரசியமான எழுதாத சட்டங்கள் என்னென்ன தெரியுமா? சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு
ஒவ்வொரு நாட்டிற்கும் அதனுடைய கலாச்சாரத் தனித்தன்மை இருக்கும். அது போலவே சுவிசிக்கும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒருசில எழுதாச் சட்டங்கள் உண்டு.
பல வகையான கலாச்சாரங்கள் சுவிஸ் ஒரு வண்ணமயமான கலாச்சாரக்கலவையான நாடு. குறிப்பாக நாலு தேசிய மொழிகளைக் கொண்டது. வேறுவேறு மாநிலங்களின் எண்ணங்கள் வேறுவேறாக இருப்பதுபற்றி ஆச்சரியப்படவேண்டியதில்லை. டொச்சுவிஸ் பிரதேச கலாச்சாரம் பிரான்ஸ் சுவிஸ்பிரதேச கலாச்சாரத்துடன் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
அத்துடன் நகர மற்றும் கிராமப்புறங்களுக்கிடையிலம் பெரிய வித்தியாசம் இருக்கும். எனினும் அவற்றிற்கிடையில் சிறிதளவு ஒற்றுமையும் சேர்ந்து இருக்கும்.
வணக்கம் தெரிவித்தல்
சுவிஸில் வணக்கம் தெரிவிக்கும் போது ஆண்கள் பெண்கள் என்றாலும் கூடக் கையைக் கொடுத்து கண்களுக்குள் நேராகப் பார்க்க வேண்டும். வழமையான வாழ்த்து "Grüezi" (நண்பர்களுக்கிடையில் வாழ்த்து மொழி "Hallo" அல்லது "Hoi"). கிராமப்புறங்களில் ஒருவரையொருவர் தெரியாவிட்டாலும்கூட வீதியில் காணும்போது வணக்கம் தெரிவிப்பார்கள். "நன்றி " "பரவாயில்லை " என்பன முக்கியமானவை. உதாரணமாக ஒரு கடையிலோ அல்லது உணவகத்திலோ பலமுறை "நன்றி " "பரவாயில்லை " சொல்வது சம்பிரதாயமாகி விட்டது.
நேரம் தவறாமை
அதிகமான பிரபல்யமான சுவிஸ் மக்கள் நேரம் தவறாமையைக் கைக்கொள்வதில்லையென ஒரு எண்ணம். யாராவது 5 நிமிடங்களைவிடக் கூடப்பிந்தினால் தொலைபேசியில் அழைத்து தெரிவிக்கலாம்.
பிரதானமாக இந்தத் தொழில் உலகில் நேரந்தவறாமை உயர்ந்த பெறுமதியாகக் கருதப்படும். யாரையாவது சந்திக்க விரும்பினால் முன்கூட்டியே நேரம் தீர்மானிக்கப்படுகிறது. திடீரெனப் போவது தனிப்பட்ட இடங்களிலும் வழமையில் இருப்பதில்லை.
மறைமுகத் தொடர்பாடல்
சுவிஸில் சங்கடமான விடயங்களை அதிகமாக மறைமுகமாகத்தான் சொல்லுவார்கள் பேசுபவர் விமர்சனங்களை மறைமுகமாக அல்லது பெரிய சொற்றொடர்களுக்கிடையில் மறைத்துப் பேசுவார்.
அதை விட விமர்சித்தவர் தன் விமர்சனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பார். சரியானபடி டொச் பேசத்தெரியாதவர்களுக்கு இதை விளங்கிக் கொள்வது இலகுவான விடயமல்ல.
மனஉணர்வுகளை வெளிப்படுத்த விரும்பினால், அச்சந்தர்ப்பங்களில் நேரடியான பேச்சுக்கள் அக்குழப்பமான நிலையை தவிர்க்க உதவும்.
உதாரணமாக சிலவேளைகளில் பக்கத்துவீட்டுக்காரரிடமிருந்து தம்மை இடைஞ்சல்படுத்துவதாக தபால் ஏதாவது வந்து அவரை தூண்டினால். தெளிவில்லாத பிரச்சினையாயின் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விசாரிப்பது எப்போதும் நலமானதாகும்.