மாமியார் வீட்டு விருந்தை முடித்ததும் அக்கட தேசத்தை ஆட்டம் காண வைக்க போகும் தளபதி
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தை முடித்துவிட்டு லண்டன் சென்றிருக்கிறார். விஜய்யின் மனைவி சங்கீதாவின் வீடு லண்டனில் இருப்பதால் ஒவ்வொரு படமும் நிறைவடைந்த பிறகு வெக்கேஷனுக்காக அங்கு சென்று விடுவார்.
இந்த முறையும் அப்படி மாமியார் வீட்டு விருந்துக்கு சென்ற விஜய், விருந்து முடிந்த கையோடு அக்கட தேசத்தில் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். ஏற்கனவே விஜய்யின் அரசியல் பயணம் அதிவேகம் எடுத்து வருவதால் தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற பரபரப்பு நிலவுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அக்கட தேசமான கேரளாவில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முந்தைய நாள் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் அணி கூட்டம் பனையூரில் நடைபெறுகிறது.
ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பயிலகத்தை ஒவ்வொரு தொகுதிகளும் நிறுவினார்.
இவ்வாறு விஜய்யின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் கட்சிகளுக்கு இணையாக நடந்து வருகிறது. அப்படித்தான் விஜய் மக்கள் இயக்கத்தில் அரசியல் கட்சியில் உள்ளது போல் வழக்கறிஞர் அணி தொடங்கப்பட்டு உள்ளது.
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பனையூரில் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு தமிழக முழுவதிலும் உள்ள மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறப்போகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு அவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதேபோலவே அடுத்த நாளான வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 6 ஆம் தேதி கேரளாவில் இருக்கும் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து தன்னுடைய அரசியல் பயணத்தை குறித்த முக்கிய முடிவுகளையும் கலந்தாலோசிக்க போகிறார். இதனால் தற்போது தமிழகத்தை போலவே கேரளா அரசியல் களமும் சூடு பிடித்துள்ளது.