தனுசு ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

#Astrology #Benefits
Prasu
2 years ago
தனுசு ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கல்

ராசி கற்களானது ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஏற்றவாறு மாற்றம் அடையக்கூடியவை. மேலும் நவமணிகள் ஒவ்வொன்றும் கிரகத்தின் அம்சமாக விளங்குவது. 

நவமணிகளை அணிவதன் மூலம் கிரகத்தின் நல்லதன்மைகள் கதிர் வீச்சுகளாய் நம் உடலில் ஊடுருவி கிரகத்தின் பாதிப்புகளை சமநிலைபடுத்துவதோடு அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

தனுசு ராசி கல்: தனுசு ராசியினர் அணிய வேண்டிய மோதிரம் கனக புஷ்பராகம். 

குரு தசை நடப்பவர்களும் இந்த கனக புஷ்பராகம் மோதிரத்தினை அணியலாம். இந்த மோதிரத்தினை அணிந்தால் நல்ல செல்வத்தையும் மற்றும் மன அமைதியையும் கொடுக்கும். 

கனக புஷ்பராகம் அணிவதால் நல்ல கம்பீரத்தை கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும். புதிதாக வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். 

பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும். குரு தசை உள்ளவர்கள் இந்த மோதிரம் அணிவதால் நல்ல செல்வ விருத்தியை கொடுக்கும். ஆரோக்கியமான உடல் வளத்தினை கொடுக்கும். 

பூர்விக சொத்துக்கள் வந்தடையும். மனதில் உள்ள தேவையற்ற குழப்பங்கள் நீங்கி நல்ல தீர்வை தரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4