பண விரயம் அதிகரிக்கும் மூன்று ராசியினர் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
பண விரயம் அதிகரிக்கும் மூன்று ராசியினர் , அதிலும் கன்னி ராசிக்காரர்களுக்கான - இன்றைய ராசிபலன்

மேஷம்: 

அசுவினி : உங்கள் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவும், வெளியூர் பயணத்தில் நன்மையும் கிடைக்கும். பரணி : மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1 : மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4 : நீங்கள் நினைத்த செயல் நிறைவேறும். தந்தையின் ஆலோசனையால் நன்மை தரும் நாள். ரோகிணி : பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் செயல் மற்றவர்களால் புகழப்படும். மிருகசீரிடம் 1,2 : பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்.

மிதுனம்:

மிருகசீரிடம் 3,4 : இரண்டு நாட்களாக இருந்து வந்த தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை : வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புனர்பூசம் 1,2,3 : சிந்தித்து செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைக்கான காரணத்தை கண்டறிவீர்.

கடகம்: 

புனர்பூசம் 4 : இன்று பகல் வரை உங்கள் விரும்பியபடி செயல்படுவீர். நீங்கள் நினைத்த செயலை முடிக்கும் நாள். பூசம் : நண்பர்கள் உதவி அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் காண்பீர். மகிழ்ச்சியான நாள். ஆயில்யம் : பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். இன்று உங்கள் செயல் நிறைவேறும்.

சிம்மம்

மகம் : திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வீர். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பூரம்: ஆரோக்கியத்தில் இருந்த சங்கடம் அகலும். உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். உத்திரம் 1 : நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். அரசு வழியிலான முயற்சி ஆதாயமாகும். முன்னேற்றமான நாள்.

கன்னி

உத்திரம் 2,3,4 : உற்சாகத்துடன் செயல்படுவீர் என்றாலும் எதிர்பார்த்த வரவில் இழுபறி ஏற்படும் நாள். அஸ்தம் : குடும்பத்தில் இருந்த நெருக்கடி, உடலில் இருந்த சங்கடம் விலகும். எதிர்பாராத பண வரவு திருப்தி தரும். சித்திரை 1,2 : தேவையற்ற செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்

சித்திரை 3,4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். சுவாதி : திட்டமிட்டிருந்த செயலில் மாற்றம் செய்வீர். உங்கள் முடிவு லாபத்தை உண்டாக்கும். நன்மை பெருகும். விசாகம் 1,2,3 : உறவினர் வழியில் சில சங்கடம் உண்டாகும் என்றாலும் சமாளித்து வெற்றி காண்பீர். 

விருச்சிகம்: 

விசாகம் 4 : உங்கள் முயற்சி தள்ளிப்போகும். உறவினர்களால் சில சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். அனுஷம் : நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். கேட்டை : பழைய முயற்சி ஒன்றில் இன்று லாபம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். 

தனுசு

மூலம் : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பூராடம் : புதிய சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும் என்றாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி வரும். உத்திராடம் 1 : நீண்ட நாள் பிரச்னை ஒன்று இன்று நல்ல முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : மனக்குழப்பம் விலகும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். திருவோணம் : தடைபட்ட செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும். அவிட்டம் 1,2 : வரவை வைத்து கடன்களை அடைப்பீர். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர். 

கும்பம்

அவிட்டம் 3,4 : உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். தொழிலை விரிவு செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சதயம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : அதிக செலவுகளால் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். உங்கள் செயல் திடீர் என நிறைவேறும். 

மீனம்

பூரட்டாதி 4 : எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை அடைவீர். உத்திரட்டாதி : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். ரேவதி : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும்.